
Traditional Games
- Categories News&Events
- Date April 15, 2025
தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்திய பின்பு விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி, அலைபேசிகளில் குறும்படம் மற்றும் விளையாட்டுகள் விளையாடி வருகின்றனர் இக்கால குழந்தைகள். விடுமுறை நாட்களில் வீதிகளில் குழந்தைகள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து ஒற்றுமை வளர்த்தது அக்காலம். நம் கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கிய உடல் மற்றும் மனம் பலப்படும் விதமாக விளையாடப்பட்ட விளையாட்டுகள் மூலம் விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, சமயோசித யோசனை, சாமர்த்தியம், எண் கணிதம், அறிவியல் போன்ற அனைத்தையும் வளர்க்கும் நம் மறந்து போன( மறைந்து போன) விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், பட்டம் விடுதல் ,பச்சை குதிரை போன்ற விளையாட்டுகளை வரும் தலைமுறையினரிடம் மீண்டும் சேர்க்கும் விதமாக கொண்டாடப்பட்டது (விளையாடப்பட்டது) நம் தமிழகப் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி. இதனை நம் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியின் இளம் மழலைச் செல்வங்களின் மனதில் பதிய வைக்கும் விதமாக நம் அடுத்த தலைமுறை இனருக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
You may also like
Honouring the Heart of Our School: Children
Smiles & Celebrations at Vivekam
